AI Enabled Teachers பயிற்சி வகுப்பு!

Image



சென்னை மண்ணடி MEASI மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு 15-02-2025 சனிக் கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்றது!

🎙️ இதில் விஸ்டம் கல்வி வழிகாட்டியின் பயிற்சியாளர்கள் S.சித்தீக் M.Tech, M. அப்துல் மதீன் B.Tech, F. முஹமது ஜாவித் B.E ஆகியோர் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

🎯 Artificial Intelligence தொழில் நுட்பத்தின் மூலம் ஆசிரியர்கள் எப்படி தங்களின் திறன்களை வளர்த்து கொள்வது பற்றியும், மாணவர்களுக்கு புரியும் படி பாடம் எடுப்பது, சில வினாடிகளில் கேள்வி தாள்கள் தயாரிப்பது, மாணவர்களின் திறன்களை வளர்க்கும் வழிகள் பற்றியும் வகுப்புகள் எடுத்தனர்.

📍 ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்ட இலவச AI Applications-களை கையாளுவது பற்றியும் பயிற்சி அளிக்கப்பட்டது.

எதிர்கால மாணவர்களை திறன் சார்ந்த ஆளுமைகளாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னை FEED Association for Education & Empowerment சார்பாக இந்த வகுப்புகள் நடத்தப்பட்டது.

சென்னை FEED Association for Education & Empowerment மற்றும் MEASI மேல்நிலைப் பள்ளி நிர்வாகிகள், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் நிகழ்ச்சியை சிறந்த முறையில் ஏற்பாடு செய்து இருந்தனர்.