துபாயில் சிகரம் தொட்ட ஜமாலியன் விருது வழங்கப்பட்டது

Image



துபாய் : துபாயில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அமீரகப் பிரிவின் சார்பில் கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் எஸ். இஸ்மாயில் முகைதீன் மற்றும் இஸ்லாமியக் கழக தலைவர் முனைவர் சேமுமு முகமதலி ஆகியோருக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் பூதமங்கலம் அல்ஹாஜ் ஜியாவுதீன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன் இறைவசனங்களை ஓதி வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும் முன்னாள் மாணவர் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் விவரித்தார்.

டாக்டர் எஸ். இஸ்மாயில் முகைதீன் சமுதாய மேம்பாட்டுக்கு திருச்சி ஜமால் முகமது கல்லூரி மிகவும் முக்கியமான பங்கினை வகித்து வருகிறது. கல்லூரியின் வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்றார்.

முனைவர் சேமுமு முகமதலி கல்லூரியில் தான் படித்த காலத்தை நினைவு கூர்ந்தார்.

சிறப்பு விருந்தினர்களுக்கு ‘சிகரம் தொட்ட ஜமாலியன் விருது’ வழங்கி கவுரவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் லெப்பைக்குடிக்காடு அன்வர் பாஷா, திருப்பனந்தாள் ஏ. முஹம்மது தாஹா, பஜ்ருதீன், ரஹ்மத்துல்லா, ஜாபர் சித்தீக், மன்னர் மன்னன், நவாசுதீன், நசீர் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர். அனீஸ் நன்றியுரை நிகழ்த்தினார்.

இஸ்லாமிய இலக்கியக் கழக பொருளாளர் எஸ்.எஸ். ஷாஜஹான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முதுவை ஹிதாயத் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.