துபாயில் அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் 14 வது வர்த்தகர் சந்திப்பு கூட்டம்

Image



துபாய் : துபாயில் அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் 14 வது வர்த்தகர் சந்திப்பு கூட்டம் நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர் தலைமை வகித்தார்.

இதில் தலைமை விருந்தினர்களாக தமிழக முன்னாள் அமைச்சரும், பத்மநாபபுரம் சட்ட மன்ற உறுப்பினருமான மனோ தங்கராஜ், வி-டார்ட் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சித் அகமது, சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.என்.பாஷா, இங்கிலாந்து உலக தமிழ் அமைப்பின் நிறுவன தலைவர் ஜேகப் ரவிபாலன் ஆகியோர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களாக அமீரகத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், அப்தெல்ரசாக் முகம்மது அகமது அல்ஹுசைன் அல்ஹம்மாதி, நாதா சுல்தான், ஹனான் அல் நுயைமி, பவுசியா ஜகூர், முகம்மது அல் பஹ்ரைனி மற்றும் சலே அன்சாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், டிஜிட்டல் மார்க்கெட்டிங், தொழில்முனைவு, மைக்ரோ பொருளாதாரம் உள்ளிட்ட தலைப்புகளில் விருந்தினர்கள் உரையாற்றினர்.

உலக களரி சேம்பியன்ஷிப் போட்டி சிறப்பாக நடக்க ஒருங்கிணைத்த டீபா நிர்வாகிகள் மணிகண்டன், கால்டுவெல், டாக்டர் ஸ்ரீவித்யா, பசிலா உள்ளிட்டோர் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார்.

இந்த கூட்டத்தில்அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் டீபா கூட்டமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்ட சுமார் 300 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.