அஜ்மானில் மங்கையர் அமீரகம் சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

Image



அஜ்மான் : அஜ்மானில் மங்கையர் அமீரகம், ரமலான்கேர் அமைப்புடன் இணைந்து இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்.தது.

இந்த நிகழ்ச்சியில் போலீஸ் அலுவலர் முஹம்மது மொஹ்சின், அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

மங்கையர் அமீரகத்தின் தலைவி பிரீத்தி ராஜேஷ் தலைமையிலான குழுவினர் 650 க்கும் மேற்பட்டோருக்கு நோன்பு திறப்பதற்கான ஏற்பாடுகளை சிறப்புடன் செய்திருந்தனர்.