ஷார்ஜாவில் யோகா விழிப்புணர்வு பயிற்சி

Image



ஷார்ஜா : ஷார்ஜா முவைலா பகுதியில் உள்ள ஸ்காலர்ஸ் இண்டர்னேஷனல் அகாடமியில் அமீரக தமிழ் சங்கம், வெளிநாட்டு வாழ் பெண்கள் அமைப்பு, சர்வதேச இளைஞர் யோகா பெடரேஷன் மற்றும் நானா யோகா ஸ்டுடியோ ஆகியவை இணைந்து யோகா விழிபுணர்வு பயிற்சி வகுப்பு நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர் கலந்து கொண்டார். அவருக்கு அமீரக தமிழ் சங்கத்தின் தலைவி டாக்டர் ஷீலா பூங்கொத்து வழங்கி கௌரவித்தார்.

யோகா ஆசிரியர்கள் எஸ். ஆறுமுகம், பத்மஸ்ரீ வி. நானம்மாள் பேரன் என். ஜெயராமன் ஆகியோர் யோகா பயிற்சியினை வழங்கினர்.

அதனை பின்பற்றி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், ஐம்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். மேலும் யோகாவின் முக்கியத்துவம் குறித்து தெரிவிக்கப்பட்டது.