கீழக்கரை பகுதியில் தர்பூசணி பழங்கள் விற்பனை அமோகம்
இராமநாதபுரம் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கோடை காலம் துவங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மேலும் மே மாதத்தில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் மதுரை திண்டுக்கல், ஆகிய மாவட்டங்களில் இருந்து தர்பூசணி வாங்கி கீழக்கரை பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருவது வழக்கம்.
ஆனால், இந்தாண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால்,வெளி ஊர்களில் இருந்தும் கீழக்கரை பகுதியில் தர்பூசணி விற்பனை கடைகள் மற்றும் வாகனங்கள் மூலம் கீழக்கரை நகர் பகுதிகளில் உள்ள தெருக்களில் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் தர்பூசணி விற்பனை அமோகமாக உள்ளது. இதுகுறித்து தர்பூசணி விற்பனையாளர் கூறுகையில், மதுரை,திண்டுக்கல், இன்னும் பிற மாவட்டத்தில் இருந்தும், லாரிகளில் தர்பூசணி கீழக்கரை பகுதிக்கு கொண்டு வரப்பட்டு, சாலையோரங்களில் கூடாரம் அமைத்தும், பழக்கடைகளிலும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தர்பூசணி பழங்களை பொதுமக்கள் தேடி வந்து வாங்கி செல்கின்றனர் என்று தெரிவித்தனர்.