தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு

Image

தமிழகத்தில், சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு போன்ற மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் அதிகமாக இருப்பதால் அதைக்கட்டுப்படுத்த இந்த மூன்று மாவட்டங்களுக்கு மார்ச்- 31 வரை ஊரடங்கு உத்தரவை அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில், இந்த மூன்று மாவட்டங்களிலும் மக்கள் அத்தியவசியமான பணிகளை தவிர மற்ற பணிகளை நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மற்றும் மூன்று மாவட்ட எல்லைகளையும் மூடி சீல் வைக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மக்களுக்கு தேவையான அத்தியவசிய பொருட்கள் கிடைக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.