திட்டமிட்டால் சிரித்து வாழலாம்

Image


சில வீடுகளில் வீட்டின் வருமானம் குறைவாக இருக்கும் ஆனால் மகிழ்ச்சியாக இருப்பார்கள், இதற்கு இதுவும் ஒரு காரணம் அவர்கள் கடைப்பிடிக்கும் சிக்கனம் மற்றும் சரியான திட்டமிடுதல் தான்.

*வீட்டிற்கு தேவையான பொருட்களை மட்டும் வாங்குதல், அதிக பணத்தை டிரஸ் எடுப்பதில் செலவிடக்கூடாது.

*சமையலுக்கு தேவையான மிளகாய், புளி, பூண்டு மற்றும் எல்லாவற்றையும் அதனுடைய அறுவடை காலத்தில் வாங்கினால் பணத்தை சேமிக்கலாம்.

*வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் டூவீலர், எலக்ட்ரானிக் பொருட்களை துடைத்து சுத்தமாக வைத்தால் அதனுடைய ஆயுட்காலம் நீடிக்கும். இதனால் மிச்சப்படுத்தலாம்.

*காய்கறி மற்றும் பழங்களை சில்லரையாக வாங்காமல் பெரிய மார்க்கெட்டில் வாங்கினால் பணத்தை சேமிக்கலாம்.

மாத வருமானத்தில் 25% சேமிப்பிற்கு தனியாக எடுத்து வைக்கவேண்டும்.