நிறைமாத கர்ப்பிணியா நீங்கள்..?
பிரசவத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் கர்ப்பிணிப் பெண்களில் நீங்களும் ஒருவரா? பிறக்கப் போகும் குழந்தையைப் பற்றிய கனவுகளிலும், கற்பனைகளிலுமே பத்து மாதங்களையும் செலவிடும் சராசரிப் பெண்ணாக நீங்களும் இருந்து விடாதீர்கள். புதிய உலகில் கால் வைக்கப் போகும் உங்கள் குழந்தைக்காக பிரசவ காலத்திலிருந்தே சில முன்னேற்பாடுகளை செய்ய வேண்டியது உங்கள் கடமை. மருத்துவர் உங்களிடம் தெரிவித் துள்ள பிரசவ நாளுக்கு மூன்று வாரங் களுக்கு முன்பே பிரசவத்திற்குப் பிறகு உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் தேவையான பொருட்களைத் தயாராக வைப்பது பிரசவத்திற்குப் பிறகான உங்கள் டென்ஷனைக் குறைக்கும். பிரசவத்திற்காக மருத்துவமனைக்குச் செல்வதற்குமுன் நீங்கள் தயாராக வைத்துக் கொள்ள வேண்டியவை. அமென்மையான, சுத்தமான பேபி ஆயில். அபேபி கிரிம் மற்றும் பேபி சோப். அஸ்டொரிலைஸ் செய்யப்பட்ட நிப்பிளுடன் கூடிய பால் பாட்டில். தண்ணீர் வைக்க சிறிய கூ ஜா மற்றும் சிறிய ஸ்ன். பஞ்சு. சுத்தமான டர்கி டவல்கள். குழந்தையைச் சுற்றி வைத்துக் கொள்ளுமளவுக்குப் பெரிய டவல்கள். ஆன்டிசெப்டிக் லோஷன். குழந்தை பிறந்ததும் அதற்கு அதிகளவில் உடைகள் தேவைப்படாது. குளிர்காலத்தில் குழந்தையைக் கம்பளியிலோ, அழுத்தமான போர்வையிலோ சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதில் தேவைப்பட்டால் குழந்தைக்கு ஸ்வெட்டர், தலையில் குல்லா மற்றும் கால்களுக்கு சாக்ஸ் மட்டும் அணி விக்கலாம். குழந்தையை அழகாக்கும் எண் ணத்தில் அதற்கு அளவுக்கதிக ஃப்ரில் வைத்த உடைகளை அணிவிப்பதைத் தவிர்க்கவும். குழந்தையை வீட்டுக்கு அழைத்து வரும்போது தயார் நிலையில் வைத்திருக்க வேண்டியவை... பின்புறம் திறந்தபடியோ அல்லது நாடா வைத்துக் கட்டியபடியோ இருக்கும் சிறிய சட்டைகள். குளிர்காலமாக இருப்பின் ஸ்வெட் டர்கள். அபழைய சுத்தமான புடவை அல்லது வேட்டிகளிலிருந்து தயார் செய்யப்பட்ட நாப்கின்கள். சிறிய மெல்லிய தலையணைகள் மற்றும் தலையணை உறைகள். தொட்டிலைச் சுற்றி மூடும் வகை யில் கொசுவலை. ரப்பர் ஷீட்டுகள். டாய் லட் பேப்பர்கள். குழந்தை அவ்வப்போது சிறுநீர் கழிக்கும் போது உடனுக்குடன் அதன் உறுப்புகளை வெது வெதுப்பான தண்ணீர் மற்றும் மிருதுவான சோப் கலந்து துடைத்து சுத்தப்படுத்த வேண்டும். குழந்தையின் உடல் ஈரம் போகக் காய்ந்ததும் பேபி ஆயிலோ, லோஷனோ தடவி விட்டு நாப்கின் அணிவிக்கலாம். மருத்துவமனையில் இருக்கும்போது தாய்மார்கள் தயாராக வைத்திருக்க வேண்டியவை... சுத்தமான டவல்கள். பற்பசை மற்றும் பிரஷ. பாலு}ட்ட ஏதுவான நைட்டிகள் மற்றும் பிராக்கள். ஒவ்வொரு முறை பாலு}ட்டும் முன்பும் மார்பகங்களை மசாஜ; செய்ய ஆவில் ஆயில் பாட்டில். .