புனித ரமலானே... வருக வருக!

Image


புனித ரமலான் பூத்திருக்கு
புன்னகை பூமியில் காத்திருக்கு
குர்ஆனை தினமும் திறந்திடுவோம்
கொரோனா வைரஸை மறந்திடுவோம்

அதிகாலை நேரத்தில் எழுந்திடுவோம்
ஐவேளை அல்லாஹ்வை தொழுதிடுவோம்
நம்பிக்கை விளைநிலம் உழுதிடுவோம்
நாயனிடம் கையேந்தி அழுதிடுவோம்

நோன்பின் மாண்புகளை விளங்கிடுவோம்
வறியோர்க்கு ஜக்காத்தை வழங்கிடுவோம்
ஈமானில் சீமானாய் துலங்கிடுவோம்
ஈடேற்றம் வேண்டுமென கலங்கிடுவோம்

இறைத்தூதர் நபிவழியில் நடந்திடுவோம்
கறைப்படிந்த வாழ்க்கையினை கடந்திடுவோம்
ரஹ்மானின் பேரருளைப் புகழ்ந்திடுவோம்
ரமலானை வரவேற்று மகிழ்ந்திடுவோம்

முனைவர் மு. அ. காதர், சிங்கப்பூர்