தமிழ் புத்தாண்டு

Image


ஒவ்வொரு வருடம் சித்திரை மாதம் முதல் நாளை தமிழ் வருடப்பிறப்பாக தமிழர்கள் கொண்டாடி வருகிறோம். பிலவ வருடத்திலிருந்து சுபகிருது வருடத்திற்கு வருகிறோம்.

60 தமிழ் வருடங்களில் 2022 ஆம் ஆண்டில் சுபகிருது தமிழ் புத்தாண்டு பிறக்கப் போகிறது. இது 60 ஆண்டுகளில் 36 ஆவது ஆண்டாகும்.

சூரியன் சரியாக கிழக்கு திசையிலிருந்து தன் பயணத்தை துவங்கும் நாள். இந்த நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம்.

சுபகிருது என்றால் அதிக நன்மைகள் நிறைந்த ஆண்டு என்று பொருள்.

தீப விளக்கேற்றி தீய வைரஸான கொரோனாவை விரட்டுவோம், சுபகிருது வருடத்தில் எல்லா வளமும் பெற்று எல்லோரும் மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.