திருப்பதியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்

Image

கொரோனா வைரஸ் பாதிப்பு இங்கு மட்டும் இல்லாமல் திருப்பதி வெங்கடாச்சலபதியையும் விட்டு வைக்கவில்லை.

திருப்பதிக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்று அறிந்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.

மேலும் தேவஸ்தானம் ஒரு அறிக்கையை வெளிவிட்டு உள்ளது. காய்ச்சல், சளி மற்றும் இருமல் இருக்கும் பக்தர்கள் தயவு செய்து வரவேண்டாம் என்றும் மேலும் பக்தர்களை பொது தரிசனத்திற்கு வைகுண்டம் க்யூ காம்ளக்சில் காத்திருக்கவைக்காமல் நேரடி தரிசனத்திற்கு அனுமதிக்க ஏற்பாடு செய்துள்ளது. மேலும் கொரோனா வைரஸை ஆய்வு செய்யும் மருத்துவ குழுவினரையும் தேவஸ்தானம் அமைத்துள்ளது.

ஒரு சில ஆர்ஜித சேவைகள், விஷேச பூஜை, சகஸ்ரகலசாபிஷேகம், வசந்தோற்சவம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் வரும் எண்ணிக்கையை பொருத்து சில பூஜை நேரம் மாற்றியமைக்கப்படுகிறது.300 ரூபாய் கட்டணம் மற்றும் தங்கும் வசதி முன்பதிவை ரத்து செய்துள்ளது. மற்ற பக்தர்கள் ஆதார், வாக்காளர் , டிரைவிங் உரிமம் ஆகியவற்றை காட்டி தரிசன நேரத்தை பெற்றுக்கொண்டு ஏழுமலையானை தரிசிக்கலம்.

கொரோனா வைரஸ் பாதிப்பு நீங்க சிறப்பு மகாயாகம் நடைபெறுகிறது.