கையில் எப்போதும் தராசை வைத்திருக்காதீர்கள்

Image


நிறையப்பேர் பார்த்தோமென்றால் கையில் ஒரு தராசை வைத்திருப்பதை போல திரிந்து கொண்டிருப்பார்கள்.

எது நல்லது, எவர் புத்திசாலி, அவர் முட்டால், இவர் அன்பானாவர், அவர் சுயநலவாதி, இது லாபமனது என்று தங்கள் அனுபவத்தை, அறிவை ஒரு தட்‌டில் வைத்து மற்றவர்களை நிறுத்து பார்த்து அதற்கேற்பவே நடந்து கொள்வார்கள்.

இந்த உலகத்தில் எந்த ஒன்றும் முழுமையாக நல்லது, சரியானது, உண்மையானது என்றோ முழுமையாக கெட்டது, பொய்யானது என்றோ சொல்லவே முடியாது.

நல்லது கெட்டதிற்கான சதவிகிதம் தான் கூடக் குறைய மாறுபடும்.

எனவே நம் பக்க தராசில் நாம் வைக்கும் எண்ணத்திற்கு ஏற்பத்தான் மற்ற தராசின் அளவு இருக்கும். எனவே நம் கணிப்பு நியாயமானதாக நடுநிலைமையாக இருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை.

எனவே யாரையும் எந்த நிகழ்ச்சியையும் எடை போடாதீர்கள். எடை போட்டு எல்லாவற்றையும் நிறுத்துக் கொண்டேயிருந்தால் எல்லா உறவுகளையும் நிறுத்த வேண்டியே வரும்..

”குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை” என்பது போல் குற்றம் பார்த்துக்கொண்டேயிருந்தால் தனிமை பட்டு போக வேண்டியது தான்.

Image



M.Vimalatharani M.sc(couns&psyc),MD(acu),DHBM

psychotherapist