ஆரோக்கியமான எடை குறைப்பு

Image


ஆரோக்கியமான எடை குறைப்பு நம் கையில் கீழே கூறியவற்றை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.

இதை பின்பற்றினால் ஒரு மாதத்தில் 5 கி முதல் 15 கி வரை எடை குறையும். ஆனால் விடாமுயற்சியுடன் ஒரு மாதம் பின்பற்றவேண்டும்.

காலை 5- 5.30 மணிக்குள் வெந்தய, சீரகம், கொள்ளு தண்ணீர் இரண்டு டம்ளர் அளவிற்கு மிதமான சூட்டுடன் குடிக்க வேண்டும். (ஒரு நாள் சீரகத் தண்ணீர், அடுத்த நாள் கொள்ளு தண்ணீர் என்று மாற்றி மாற்றி குடிக்க வேண்டும்.

இதற்கு பிறகு 1/2 முதல் 3/4 மணி நேரம் யோகா, நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்யவேண்டும்.

பிறகு 8.30 மணிக்குள் கேழ்வரகு கூழ் ஒரு டம்ளர். மதிய உணவிற்கு சாதம் (ஒரு கிண்ணம்) அதனுடன் காய்கறிகள் (நீர் காய்கள்) அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும். இடையில் பசித்தால் (வாழைப்பழம், கொய்யா, வெள்ளரிக்காய், கேரட் சாப்பிடலாம்.) மற்றும் வெந்தய தண்ணீர் குடிக்கலாம்.

வெந்தையத்தை இரவில் ஊறவைத்து மறு நாள் தண்ணீர் நிறைய ஊற்றி கொதிக்க வைத்து (3 லி அளவிற்கு) ஒரு நாளைக்கு குடிக்க வேண்டும். மாலையிலும் 1/2 முதல் 3/4 மணி நேரம் (நடைப்பயிற்சி, உடற்பயிற்சி (அ) யோக செய்ய வேண்டும்.

இரவு உணவு ஒரு சப்பாத்தி அதனுடன் தயிர் பச்சடி (அ) காய்கறிகள் வைத்து சாப்பிடலாம். (வெந்தய தண்ணீரை இரவு 8 மணிக்குள் குடித்துவிட வேண்டும்) இவ்வாறு ஒரு மாதம் செய்தால் உடல் எடை குறைந்து ஆரோக்கியமான உடல் அமைப்பு கிடைக்கும்.